1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay planning to compaign in madhuranthagam

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம்!.. தேதி குறித்த விஜய்!.. அரசியல் பரபர...

vijay
2006 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சரானதும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழு எம்எல்ஏக்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இதையடுத்து தவெக குதிரை நேரத்தில் ஈடுபட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில்தான் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற அக்டோபர் 6ம் தேதி அந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில்தான் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வருகிற 25ம் தேதி முதலமைச்சர் விஜய் அச்சரப்பாக்கம் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மைதானத்தில் வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எனவே அதற்கான ஏற்பாடுகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தவெக செயல்பட்டு வருகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாராபுரத்தில் என்ன நடக்கிறது? வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முன்னேற்பாடா?