அஜித்துக்கு நேரில் போய் ஆறுதல் சொன்ன விஜய்!.. வைரல் வீடியோ....
அஜித்தும் விஜயும் சமகாலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து, அதன்பின் ஆக்சன் ரூட்டுக்கு மாறி பின்னர் மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். ரஜினி, கமல் போல விஜய் - அஜித் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வந்தார்கள்.
தற்போது விஜய் அரசியலுக்கு சென்றிருக்கிறார். அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்தான் அஜித்தின் தாயார் மோகினி (89) வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். இதைத் தொடர்ந்து அஜித்தின் நெருக்கமான இயக்குனர்களும், திரையுலகை சேர்ந்த பலரும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார். காரிலிருந்து இறங்கி கையில் மாலையோடு சென்று அஜித்தை கட்டியணைத்து விஜய் ஆறுதல் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Their friendship ???????? AK and @TVKVijayHQ pic.twitter.com/MCJUcsNjof
— Rajasekar (@sekartweets) May 30, 2026