1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin will announces about school open soon

6-8 வகுப்புகள் தொடங்குவது எப்போது? இன்று முதல்வரிடம் அறிக்கை!

வகுப்புகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு திறக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் 
 
இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விரைவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அனேகமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!