1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM stalin warning to dmk district secretaries

பொறுப்போடு செயல்படாவிட்டால் மாற்றப்படுவீர்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

MK Stalin
பொறுப்போடு செயல்படாவிட்டால் மாற்றப்படுவீர்கள் என திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு  முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் படி சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டது என்பதும் இதனை அடுத்து மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கட்சியில் உழைக்காதவர்களுக்கு இடம் இல்லை என்றும் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன் என்றும் கட்சி பணிகளை பொறுப்போடு செய்ய வேண்டும் இல்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கு மாவட்ட செயலாளர்களின் கடுமையான உழைப்பு வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடந்தது மோக்கா புயல்: பெரும் சேதமா?