வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:02 IST)

அமெரிக்காவுக்கு வாருங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க கட்சி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை அமெரிக்காவுக்கு வாருங்கள் என அமெரிக்கா கட்சியை சேர்ந்த ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார் 
 
வரும் ஜூலையில் அமெரிக்காவில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த ராஜன் நடராஜன் என்பவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேலும் வெளிநாட்டு வாழ் தமிழர் நல துறை அரசு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.