செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (08:54 IST)

என் இதயம் உடைந்துவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

MK Stalin
மணிப்பூரில் நிகழ்த்த சம்பவத்தால் என் இதயம் நொறுங்கி உடைந்து விட்டது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர தாக்குதல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டு என் இதயம் நொறுங்கியது என்றும் இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்து உள்ளார் 
 
மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் என் மனம் உடைந்தது என்றும் வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு புடுங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
முன்னதாக மணிப்பூரில் பழங்குடியின பெண் ஒருவரை நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Siva