1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2024 (20:24 IST)

தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ: முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு..!

தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகளின் வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாட்டில் பேசியுள்ளார் 
 
தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ என்றும் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பேசிய முதல்வர் மற்ற மாநிலங்களில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார் 
 
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற கூட்டாட்சி  இருக்காது என்றும்  ஏன் மாநிலங்களை இருக்காது என்றும் இந்தியாவை சர்வதேச சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார்கள் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் தந்தை பெரியாரையும் அம்பேத்கரையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போல் திமுகவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva