1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin speaks to seeman by phone

சீமானிடம் தொலைபேசியில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்!

சீமான்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்
 
அதன்பின் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் அவர் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சீமானின் உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் நலம் விசாரித்தார். சீமான்  தான் நலமாக இருப்பதாக முதல்வரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
இந்த ஆண்டு மட்டும் 415 தனியார் பள்ளிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!