திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (08:45 IST)

அகில இந்திய அளவில் நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

“திமுகவுடன் இருப்பதைப் போல, அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என்றும் அது என் விருப்பம் என்றும்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பிரச்சாரம் செய்வதற்காக தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி வந்தபோது அவரை மேடையில் வைத்து வலியுறுத்தியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்!
 
தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் கலவையாகும் என்றும், இரண்டையும் பிரிக்க முடியாது என்றும், ஒற்றுமையே பலம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.