திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:12 IST)

இந்த ஆண்டு மட்டும் 415 தனியார் பள்ளிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

இந்த கல்வி ஆண்டில் மட்டும் 415 பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வரும் 2022 23 ஆம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்னும் சில தனியார் பள்ளிகள் அரசின் அனுமதி பெறாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அரசு அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 25% மேலாக தங்களது அதிகாரத்தை புதுப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது