நாளை ’வலிமை’ ரிலீஸ்: தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
நாளை வலிமை சிமெண்ட் ரிலீஸ் செய்யப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து சிமெண்ட் விலை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் தமிழக அரசு வலிமை என்ற சிமெண்ட் தயாரித்து வருவதாகவும் இந்த சிமெண்ட் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக அரசின் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள வலிமை சிமெண்ட் நாளை ரிலீசாகும் என்றும், முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இதனை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிமெண்ட் மிக குறைந்த விலையில் வீடு கட்டுபவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது