பசுவின் கோமியம், சாணத்தை வைத்து பொருளாதாரத்தை உயர்த்தலாம்: பாஜக முதல்வர்
பசுவின் கோமியம் மற்றும் சாணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தலாம் என பாஜக முதலமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பசுவின் மாட்டுச் சாணமும் கோமியமும் நாட்டின் பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்
பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள் தயாரிக்கலாம் என்றும் இந்த மருந்துகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் நிச்சயம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அவர்களின் இந்த கருத்து இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது