திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (17:27 IST)

மத்திய பல்கலை நுழைவுத்தேர்வை உடனே திரும்ப பெறுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

stalin
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது 
 
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர முடியாது என்றும் நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே சேர முடியும் என்றும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
 
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
 நீட் தேர்வை போன்று மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்