திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (10:50 IST)

இன்று வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..! தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம்..!!

stalin
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநாடு செல்கிறார்.
 
சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்து நாள் சுற்றுப்பயணமாக இன்று வெளிநாடுகளுக்கு  பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய்க்கு செல்கிறார். 
 
அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களை பார்வையிட உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொழிலதிபர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.


10 நாள் பயணத்தை முடித்துவிட்டு, அடுத்த மாதம் 7-ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் மூலம், தமிழ்நாட்டுக்கு மேலும் பல்வேறு முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.