1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:03 IST)

செப்.1ல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய உள்ளார் 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது உள்பட வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென பள்ளிகள் திறப்பதை அவசரம் காட்ட வேண்டாம் என்றும் பள்ளிகளில் திறந்தால் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்திருந்தார்
 
இதனை அடுத்து என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது