வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (12:01 IST)

இலங்கை தமிழர்கள் அகதிகளோ அநாதைகளோ இல்லை - முக ஸ்டாலின்!

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
 
அந்த வகையில் நேற்று இலங்கை தமிழ் அகதி மக்கள் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகள் வாழும் வீடுகள், முகாம்களுக்கு செல்லும் சாலைகள் புனரமைத்து தரப்படும். மேலும் ஈழத்தமிழர்கள் தமிழக ரேசன் கடைகளில் இலவச அரிசி பெற்றுக்கொள்ளலாம் எனதெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்றும் இலங்கை தமிழருக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம். அவர்கள் அகதிகள் இல்லை, நாமிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.