செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (10:17 IST)

நாளையுடன் முடிவடையும் ஊரடங்கு: இன்று முதல்வர் ஆலோசனை!

நாளையுடன் முடிவடையும் ஊரடங்கு: இன்று முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் நவம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஈடுபட உள்ளார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரச் பாதிக்காமல் இருப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது