ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:27 IST)

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணிகள் அதிர்ச்சி..!

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை - நெல்லை பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் 9 பெட்டிகள் சேதம் அடைந்ததாகவும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய ஆதரவை பயணிகள் தந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது வந்தே பாரத் ரயில்கள் மீது  கல் வீசும் சம்பவம் நடந்து வருகிறது

இந்த நிலையில்  சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் 9 பெட்டிகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva