1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 ஜூன் 2021 (13:49 IST)

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு விஜயகாந்த் பாராட்டு!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். பாஜக பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பிளஸ் டூ தேர்வை பாதுகாப்புடன் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் பிளஸ் டூ தேர்வை நடத்த அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் திடீர் திருப்பமாக பிளஸ் டூ தேர்வு ரத்து என்று அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுக கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கொரோனா காலகட்டத்தில்,  மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், +2 தேர்வை ரத்து செய்து, தெளிவான முடிவு எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது’ என்று தனது டுவிட்டரில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.