12 மாநில முதல்வர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பாஜக ஆட்சியில் இல்லாத 12 மாநில முதல்வர்களுக்கு முக்கிய கடிதம் ஒன்று எழுதியுள்ளார்
கொரோனா பேரிடர் காலத்தில் மாநில முதல்வர்கள் ஒன்றிணைவது அவசியம் என்றும் சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் தரவேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை அனைத்து மாநில முதல்வர்களும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
12 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநில முதல்வர்களும் இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுத்தால் சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.