1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (13:35 IST)

ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தின் கொரோனா வைரஸால் தினமும் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார் 
 
தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்