1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (12:58 IST)

நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி மையம்! – பிரதமர் மோடி அவசர உத்தரவு!

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தற்போது நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ள அவர் இதற்கான நிதி பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.