வரும் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவில்லை - ரஜினி மக்கள் மன்ற தலைவர் தகவல்
ரஜினிகாந்த் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு(2021) நிச்சயம் வரமாட்டார். லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் தனது உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தமிழருவி மணியன் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி அறிவிக்கவில்லை என இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார்.காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்துள்ளார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைக்கவுமில்லை என்று கூறியிருந்தார்.
தமிழருவி மணியனின் இந்த அறிக்கை, உடல் நிலை சரியானதும் ரஜினி எப்போதாவது கட்சி தொடங்குவது உறிதியென்ற நம்பிக்கையை ரஜினி ரசிகர்களிடையே விதைத்தது.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சுதாகர் தற்போது ஒரு முக்கிய அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், ரஜினிகாந்த் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு நிச்சயம் வரமாட்டார். லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை; அர்ஜூன் மூர்த்தி தொடங்கவுள்ள கட்சிக்கும் ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத்திட்டமாகத் தெரிவித்துள்ளார்.