புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (14:02 IST)

அடுத்த சாமியாரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆன்மீகவாதிகளாக சென்று சந்தித்து வருகிறார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் அங்குள்ள ஆன்மீகவாதிகளை சென்று சந்தித்து அவர்களுடன் புகைபடம் எடுத்துக் கொள்கிறார். இது சம்மந்தமாக பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் ஆன்மீகவாதிகளை சென்று சந்திக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறநிலைய தலைவர் பங்காருவை சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களையும் தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ‘காஞ்சிபுரம்(தெ)மாவட்ட  @StalininKural பிரச்சார பயணத்துக்கிடையே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி-மருத்துவம்-பண்பாட்டு அறநிலைய தலைவர் பங்காரு அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தலைவர் ஸ்டாலின் அவர்கள் உட்பட குடும்பத்தாரை விசாரித்த அடிகளார் அவர்களுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.