கடலூரை வெளுக்கும் மழை.. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் சில இடங்களில்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:22 IST)
நேற்று முதலாக கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் மேலும் சில இடங்களிலும் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்துவிட்ட நிலையில் வெப்பசுழற்சி காரணமாக சில பகுதிகளில் மிதமான அளவில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதலாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடலூர் நகரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக கடற்கரையோர மாவட்டங்கள் சிலவற்றில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :