1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. postal voting done in by election in two consistency

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. தபால் வாக்குகள் பதிவு...

postal voting
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருக்கிறது. இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. முதலமைச்சர் விஜய் ஏற்கனவே மதுராந்தகத்தில் ஏற்கனவே பிரச்சாரம் செய்த நிலையில் இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில், இடைத்தேர்தலையொட்டி மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகளும், தாராபுரத்தில் 1201 தபால் வாக்குகளும் பதிவாகியிருக்கிறது. தேர்தல் பணியில் உள்ள காவல் துறையினருக்கான தபால் வாக்கைப் பதியும் பணி வருகிற அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அந்த பொய்யனுக்கு 3 வருஷம் பத்தாது!.. சவுக்கு சங்கர் கைது பற்றி அமீர் கருத்து!...