செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (14:39 IST)

விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை! – சீமான் கருத்து!

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவும் நிலையில் அவரது மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதே அதற்கு காரணம் என மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டி வருவதாலும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களாலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் நான் விசாரித்தவரை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்சினை இருந்துள்ளது. ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணமில்லை” என கருத்து தெரிவித்துள்ளார்.