வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:15 IST)

ஊரடங்கு எதிரொலி; இரவு நேர பேருந்துகள் ரத்து! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இரவு நேர அரசு பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் நேற்று பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவ்ரத்து கழகங்கள் ஊரடங்கு நேரத்தில் பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ளன. முன்னதாக இரவு நேர பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும், மேலும் பகல் நேரங்களில் மக்கள் பயணிக்க பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.