செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:49 IST)

சி.ஏ.ஏ போராட்டம் வழக்குகள் ரத்து - முதலமைச்சர் !

சி.ஏ.ஏ போராட்டம் மற்றும் கொரோனா ஊரடங்கை மீறிய வழக்குகள் ரத்து என முதலமைச்சர் அறிவிப்பு. 

 
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது  பதியப்பட்ட வழக்குகள் மற்றும் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக மாநிலம் முழுவதும் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதற்காக பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். 
 
பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அதே போல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது போட்டப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.