புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:09 IST)

அமமுகவை வலுப்படுத்த டிடிவி முயற்சிக்கட்டும் - அதிமுக அமைச்சர் நக்கல்!

அதிமுகவை மீட்டெடுப்போம் என கூறி வரும் தினகரன், முதலில் அவர்களது கட்சியை வலுப்படுத்த ஏதாவது செய்யட்டும் என அமைச்சர் நக்கல். 

 
அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் தனது சமீபத்திய பேட்டில், எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி. சென்ற முறை இருந்த அதே கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்து வருகிறது. அதில் முக்கியமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக.
 
யாரும் யார் பிடியிலும் இல்லை, அதிமுக அன்புப் பிடியில் இருக்கலாமே தவிர ஆக்கிரமிப்பு பிடியில் யாரும் இல்லை. கொள்கை வேறு, கூட்டணி வேறு நாங்கள் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளின் அடிப்படையில் மக்களை சந்திக்க போகிறோம். 
 
அதிமுகவை மீட்டெடுப்போம் என தினகரன் கூறி வருகிறார் முதலில் அவர்களது கட்சியை வலுப்படுத்த ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும். பாதிப்பேர் அந்த கட்சியில் இருந்து விலகி இங்கு இணைந்து விட்டனர். அமமுக தொண்டர்கள் அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய தயாராகிவிட்டனர்.
 
கூட்டணி அறிவித்த பிறகு யாருக்கு எத்தனை சீட் என்பது வெகு விரைவில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.