1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Classes will happen in circulatory manner says Anbil Magesh

சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் ?

அமைச்சர் அன்பில் மகேஷ்
சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிகளை திறக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேருக்கு ஒரு நாளும், எஞ்சிய 20 பேருக்கு மறுநாளும் வகுப்பு நடத்தப்பட உள்ளது. சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
மறைமுகமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா? – டிடிவி தினகரன் கேள்வி!