புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 மே 2023 (17:46 IST)

பாஜக - இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல்!

bjp
திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் அருகே பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்ம் மாவட்டம் தாராபுரம் அருகே பாஜக திருப்பூர் தெற்கு மாவட்டம் தலைவர் மங்கலம் ரவியும், இந்து மக்கள் கட்சியின் மாவட்டம் தலைவராக   ஈஸ்வரன்  பொறுப்பில்  உள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் மனதில் குரல்  நூறாவது நிகழ்ச்சி பற்றி இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி இந்து மக்கள் கட்சியின் மாவட்டம் தலைவராக   ஈஸ்வரனை நேரில் சந்தித்து மங்கலம் ரவி கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், இந்த வீடியயோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த சண்டையின்போது, மாயமடைந்த இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.