வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (10:31 IST)

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பது மத்திய அரசின் ஒரே இலக்கு- ராகுல் காந்தி

rahul gandhi
பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பது மத்திய அரசின் ஒரே இலக்காக உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சியில் அமர்ந்து. விரைவில், பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக வீழ்த்த  காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஸ்குமார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து கூட்டணி பற்றி பேசினார்.

இந்த நிலையில், நேற்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில், பாஜகவின் ஆட்சியின் பிரதமர் மோடியின் நண்பர்கள் பயனடைந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ‘’ நாட்டில், ஏழை மக்களின் வருமான 50% குறைந்துள்ளது, பணக்காரர்களின் வருமமான 40% அதிகரித்துள்ளது. நடுத்தர மக்களின் வருமானம் 10% குறைந்துள்ளது. பணவீக்கம், வேலையின்மை மக்களுக்கு துன்பம் ஏற்படுத்தினாலும்,  மத்திய அரசின் ஒரே இலக்கு மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதுதான்’ என்று கூறியுள்ளார்.