திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:50 IST)

பிபிசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட “இந்தியா தி மோடி கொஸ்டீன் (India the modi question) என்ற ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இதுபேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த சவதேச ஊடக  நிறுவனமாக பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த  நிலையில், இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் இம்மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.