1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (10:51 IST)

சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகள் குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னையை நெருங்கிய மிக்ஜான் புயல் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இதன் காரணமாக பெய்த கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மக்கள் இன்னும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த வாரம் சென்னைக்கு இன்னொரு புயல் வருகிறது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் அதனை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வருவது அடிப்படையற்றது என்றும் அது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

ஆனால் அதே நேரத்தில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 10ஆம் தேதி உருவாகி இந்திய கடல் பகுதியை நோக்கி வரலாம் என்றும் ஆனால் சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran