வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (12:44 IST)

பேரறிவாளன் விடுதலை: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

perarivalan
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து பல அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் கூறிய கருத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: முப்பது  ஆண்டுகளுக்கு மேலாக சிறை முடக்கம். தாயின் போராட்டம்... எல்லாம் இன்று முடிவிற்கு வந்துள்ளது... 
 
இன எழுச்சி நாளில் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கிடைத்த இனிப்பான செய்தி அண்ணன் பேரறிவாளனின் விடுதலை. 
 
நீதியை நிலை நாட்டிய உச்ச நீதிமன்றத்திற்கும், சட்ட வல்லுநர்களுக்கும் நன்றி.
 
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்:  ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி.. 
 
இயக்குனர் சீனுராமசாமி: 31 ஆண்டுகள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.