செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (14:16 IST)

வீரப்பன் சகோதரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

வீரப்பன் சகோதரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
mathaiyan
சந்தன கடத்தல் வீரப்பன் சகோதரர் மாதையன் கடந்த பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
1. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் சகோதரர் மாதையன்  34 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார். பல நிகழ்வுகளில் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், மாதையனுக்கு மட்டும் சிறைக் கதவுகள் திறக்க மறுக்கின்றன.
 
மாதையனுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  ஆனாலும் கூட  அவரை விடுதலை செய்ய பல ஆண்டுகளாக தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல!
 
74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.  அவர் பல முறை நெஞ்சுவலிக்காக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலையை  கருத்தில் கொண்டாவது மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!