திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 மே 2022 (11:02 IST)

31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!

ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளனை 30 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தன.

இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை  செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
supreme court

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருதியது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டம் 161வது பிரிவில் ஆளுனர் முடிவெடுக்க தாமதப்படுத்தினால் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பேரறிவாளன் விடுதலை குறித்து பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.