1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (17:42 IST)

சீன விமான விபத்து: விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை.


இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடுதல் குழுவினர் கண்டறிந்துள்ளதாக, அரசு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனை இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீன விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இரு தினங்களாக நடந்த தேடுதலுக்குப் பின் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தோர் எத்தனை பேர் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விமானத்தில் பயணித்த 132 பேரில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க மாட்டார் என அஞ்சப்படுகிறது.