புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (12:20 IST)

வாயில் காயத்துடன் சுற்றிய யானை உயிரிழப்பு! – தொடரும் யானைகள் மரணம்!

கோயம்புத்தூரில் வாயில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கோவை பகுதியில் யானைகள் அதிக அளவில் இறந்து வரும் சம்பவம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் பெண் யானி ஒன்றிற்கு அன்னாசியில் வெடி வைத்து கொடுத்ததால் அது உயிரிழந்தது. அந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த குரல்கள் உயரத் தொடங்கின.

இந்நிலையில் தற்போது கோவையிலும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் 11 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வாயில் காயத்துடன் சுற்றி வந்துள்ளது. வாயில் காயம் இருந்ததாலும் எதையும் உண்ண முடியாமல் சிரமப்பட்ட அந்த யானை உயிரிழந்துள்ளது.

கடந்த ஆறு மாத காலத்தில் 16 யானைகள் கோவை பகுதியில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது. யானைகள் இறப்பை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வன உயிர் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.