1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (19:42 IST)

சுஷாந்த்சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சுஷாந்த்சிங்கிற்கு மன அழுத்தம் கொடுத்ததாக அவரது காதலி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் சுஷாந்த்சிங்கிற்கு பிரபல நடிகர்கள் பலர் மன அழுத்தம் கொடுப்பதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென ஏற்கனவே பிரதமருக்கு பாஜகவின் முக்கிய தலைவரும் ராஜசபா எம்பியுமான சுப்ரமணியசாமி கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
மேலும் சுஷாந்த் சிங் மரணம் என்பது தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அது கொலைதான் என்றும் அதனால் சிபிஐ இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியசாமி பிரதமர் அவர்களுக்கு எழுதிய இந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது