செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (18:06 IST)

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம் – கோவையில் நடந்த பரிதாபம்!

கோவையில் சிக்கன் சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கோவை மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் காமாட்சி மற்றும் பின்கி. இவர்களின் நான்கு வயது மகன் கபிலேஷ். தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் கபிலேஷுடன் வடவள்ளி பகுதியில் தனியாக வாழ்ந்து வருகிறார் பின்கி.

இந்நிலையில் சிக்கன் எடுத்து சமைத்த பின்கி மகன் கபிலேஷ்க்கும் அதை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிக்கன் கபிலேஷின் தொண்டையில் சிக்கி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த பதற்றமடைந்த பின்கி அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனிள்ளாமல் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் மரணம் பற்றி தகவலறிந்த தந்தை சாவில் மர்மம் இருப்பதாகவும் மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.