1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay compaign in madhuranthagam

ஸ்டாலின் சார் என்னோட ஸ்வீட் அங்கிள்!.. மதுராந்தகத்தில் தெறிக்கவிட்ட விஜய்...

vijay
மதுராந்தகத்தில் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று மாலை 3:30 மணியளவில் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக, அதிமுக பாஜக எல்லாம் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்தான். டெல்லியில் உள்ள திமுகதான் பாஜக.. தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக..எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. இனிமேல், மக்களை ஏமாற்ற முடியாது..

நாங்கள் கட்டிய பாலத்தில் விஜய் ஷூட்டிங் நடத்துகிறார் என ஸ்டாலின் சார் சொல்கிறார். உங்கள் பணத்தில் நீங்கள் பாலம் கட்டினீர்களா? வெறும் 10 ஆயிரம் வைத்துக்கொண்டு பரம ஏழையாக இருக்கும் நீங்கள் எப்படி பாலம் கட்டினீர்கள்?.. தோற்றாலும், வெற்றி பெற்றாலும் ஸ்டாலின் சார் என்னுடைய ஸ்வீட் அங்கிள்/..

ஸ்டாலின் சார்.. தேர்தலுக்கு முன்பு நீங்கள் ஒரு கணக்கு போட்டீர்கள் ஆனால் உங்கள் கணக்கெல்லாம் மனக்கணக்காக மாறிவிட்டது.  எனக்கு மக்களுக்கும் உள்ளது அன்பு கணக்கு. விஜயும் கடன்தான் வாங்குகிறார் என சொல்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன். உங்களை போல கொள்ளையடிக்கவில்லை..

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை.. என்னால் எதை செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன்.. 6 சிலிண்டர் தருகிறோம் என வாக்குறுதி தந்தோம்.. தற்போதைய சூழலில் 3 சிலிண்டர் கொடுக்கிறோம்.. திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட அதிமுக திமுகவுடன் கூட்டு சேர முயன்றபோதே அவர்களின் முகத்துரை கிழிந்துவிட்டது.

எம்.ஜி.ஆருக்கும் திமுகதான் எதிரி.. ஜெயலலிதா மேடமுக்கும் திமுகதான் எதிரி.. எனக்கும் திமுக தான் எதிரி.. மதுராந்தகாம் தொகுதி மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக தனது கொள்கையை விட்டுவிட்டு திமுகவுடன் கூட்டணி அமைத்தது பிடிக்காமல்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தார்கள். அதனால்தான் இடைத்தேர்தல் நடக்கிறது’ என அவர் பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும்!.. போராட்டத்தை முன்னெடுக்கும் கரப்பான் பூச்சி இயக்கம்!...