செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (12:07 IST)

தயார் நிலையில் தலைமைச் செயலகம் முதலமைச்சர் அறை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். 
 
இதை தொடர்ந்து ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 
 
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறை தயார் நிலையில் உள்ளது. அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி செய்தியாகியுள்ளது. அடுத்த ஐந்தாண்டிற்கு முக்கிய பல முடிவுகள் எடுக்கப்படப்போகும் அந்த இடம் இதோ இது தான்...