முத்தமிழ் பேரவையின் 42 வது இசைவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு இசைவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்தமிழ் பேரவையில் 42 வது இசை நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கியதைப் பெருமையாக கருதுகிறேன். இது முத்தமிழறிஞர் கலைஞரின் 100 வது ஆண்டு விழா என்பதால் இந்த ஆண்டு முதல் முத்தமிழ் பேரவை சார்பில் கலைஞரின் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், இயல், இசை, நாகத்தைக் காப்பாற்றுவது தமிழைக் காப்பாற்றுவது ஆகும். சிலர் தமிழுக்கு விரோதமான செயல்கள் செய்து, தமிழ் முகமூடி அணிந்து மக்களை ஏமாற்ற கணக்குப் போடுகிறார்கள்.
அவர்கள் போடுவதெல்லாம் தப்பு கணக்குத்தான் என்று தமிழ் நாடு மக்கள் மட்டுமன்று இந்தியா முழுவதும் உள்ள மக்களும் தக்க பாடம் புகட்டுவர்கள் என்று தெரிவித்துள்ளார்.