இன்று முதல் ஜூலை 28ம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran