வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (12:39 IST)

கஞ்சா போதை இளைஞர் அலப்பறை.. காதலியை கண்டதும் சைலண்ட்! – சென்னையில் பரபரப்பு!

Chennai
சென்னையில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி அலப்பறை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கிஷோர் என்ற 19 வயது இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவர் கிஷோருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.

இதனால் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை உட்கொண்ட கிஷோர் போதையில் குரோம்பேட்டையில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறியுள்ளார். இதனால் உடனடியாக மின்கோபுரம் வழியாக செல்லும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. சம்பவ இடம் விரைந்த போலீஸார் இளைஞரிடம் பேசி கீழே இறக்க பார்த்துள்ளனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதனால் உடனடியாக இளைஞரின் காதலியை தேடி பிடித்து அழைத்து வந்த காவலர்கள் அவர் மூலமாக இளைஞரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்து பின்னர் கைது செய்துள்ளனர். இதனால் மின்கோபுரம் வழியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டதுடன் அப்பகுதி பரபரப்பாகவும் காணப்பட்டுள்ளது.