செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (08:26 IST)

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்..! – சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?

Police
தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 6 நாட்களில் வசூலித்த அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள சென்னை மாநகராட்சி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

கடந்த ஜூலை 6ம் தேதி இந்த அபராத விதி அமலுக்கு வந்தது. ஜூலை 6 முதல் 12ம் தேதிக்குள் வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாத 2,340 பேரிடம் ரூ.11,70,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ.1,69,500 வசூலிக்கப்பட்டுள்ளது.