வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (10:35 IST)

சென்னையில் மாலை வேளைகளில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் 2 நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.