திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (15:28 IST)

சென்னையை விசிட் அடிக்கும் லேசான மழை!!

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. நல்ல மழையில் காரணமாக இந்த ஆண்டு கோடையில் சென்னை மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்றே கருதப்படுகிறது.
 
முன்னதாக காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நல்ல மழை பெய்தது. 
 
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதோடு, சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.